ஓங்குக கல்வி உயர் குருமண்வெளி
சிவசக்தி மகா வித்தியாலயம்
ஓங்குக மாணவர் ஆசிரியர் பணி
உறுப்பயன் ஓங்குகவே!
கோங்கொடு பூங்கொடி மல்லிகை முல்லை
குளிர் பசும் பூந்தென்றல்
தீந்தமிழ் பூத்திடச் சித்தி விநாயகர்
திருவருள் ஓங்குகவே!
ஒழுக்கமும் அன்பும் உயர் குணப் பண்பும்
உயிர்த்திட மாணவர்கள்
விழுப்பொருட் கல்வி வித்தையில் சித்தி
விறற்கொடி நாட்டுகவே!
விதம் விதமான ஞானமும் கலையும்
நிரந்தரம் ஓங்குகவே
நிதந்தரு சேவை நிதம் பொலிகல்வி
என்றென்றும் ஓங்குகவே.







