குருமண்வெளி சிவசத்தி மகா வித்தியாலயம்

வரலாறு

2025 A/L மாணவர் பிரியாவிடை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg
WhatsApp Image 2024-11-10 at 5.56.42 AM.jpeg

 

நீண்ட கால கல்வி மரபினைக் கொண்ட இக்கிராமத்தில் ஆரம்பத்தில் கல்வி குருகுலக் கல்வி முறையில் அமைந்த திண்ணைப்பள்ளியின் மூலமாகக் கல்வி போதிக்கப்பட்டது. குருமணி வெளியில் வாழ்ந்த குருமார்களில் ஒருவரான கிந்தாஸ் ஐயரின் மகன் சீனித்தம்பி அவர்கள் தற்போது எமது பாடசாலை உள்ள வளவில் திண்ணைப்பள்ளி ஒன்றினை நிறுவி கல்வி போதித்து வந்தார். கிறிஸ்தவ சமயத்தை போதிக்கும் நோக்குடன் மெதடிஸ்த திருச்சபையினர் இக்கிராமத்தில் செயற்படத் 

தொடங்கிய ஒரு காலகட்டத்தில் சீனித்தம்பி அவர்கள் கிறிஸ்தவ சமயத்தினைத் தழுவிக் கொண்டு தாளியேல் சீனித்தம்பி ஆனார். இதனைத் தொடர்ந்து இவரது பொறுப்பிலிருந்த தினர்ணைப்பள்ளி 1910ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி மெதடிஸ்த மிசன் பாடசாலையாக பாடசாலைக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இம் மெதடிஸ்த மிசன் பாடசாலையை ஸ்தாபிப்பதில் அமரர் கி.தா.சீனித்தம்பி முன்னோடியாக செயற்பட்டதுடன் பாடசாவையின் முதலாவது தலைமை ஆசிரியராகவும் கடமையாற்றினார்.

திரு. கி. தா. சீனித்தம்பி ஓய்வுபெற 1914 ஆம் ஆண்டு இவரது மகளான மேரி சாமித்தம்பி தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார். இவரே இப்பிரதேசத்தின் முதலாவது பெணி தலைமை ஆசிரியராவார். இவரைத் தொடர்ந்து பாடசாலை ஸ்தாபகரின் மற்றொரு மகளின் கணவராண முகாந்திரம் ஜே.சீ.இளையதம்பி அவர்கள் தலைமை ஆசிரியராக கடமையாற்றினார். இவர் கடமையாற்றிய காலகட்டம் இப் பிரதேச கல்வி வளர்ச்சியில் இவ் வித்தியாலயம் முதன்மையான பங்காற்றிய ஒரு காப்பகுதியாகும். இவர் காலத்திலே SSC வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு பாடசாலை தரமுயர்த்தது. சுமார் 33ஆண்டுகள் இவர் தலைமை ஆசிரியராக கடமையாற்றிய போது இகிராம பெற்றோருக்கு கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதுடன் தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கி மரவாவர் எண்ணிக்கையை உயர்த்தினார். வெளிபூர் மாணவர்களும் இங்கு வந்து கல்வி கற்கத் தொடங்கினர்.

1960களில் மிரவெரி பாடசாலைகளை அரசாங்கம் கையேற்ற போது இப்பாடசாலையும் அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக் காலகட்டத்தில் திரு.க.எ.சரவணமுத்து அவர்கள் தலைமை ஆசிரியராக கடமையாற்றினார். அவர் காலத்தில் 1958ஆம் ஆண்டு இப்பாடசாலையில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1973ஆம் ஆண்டு பாடசாலையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என குறிப்பிடலாம். 1960 இல் மிசளெரி பாடசாலையானது அரசாங்கப் பாடசாலையாக மாற்றப்பட்ட போதும் பாடசாலையின் பெயர் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை என்றே இருந்தது. எளினும் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் நன்கு அறியப்பட்ட அழுத்தாளரான் அருள் செல்வநாயகம் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, நான் ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதும் பெற்றோரின் கருத்துக்கு மதிப்பளித்து பாடசாலையின் பெயரை 1973.06.08ஆம் திகதி சிவ சக்தி வித்தியாலயம் என சைவப் பெயராக மாற்றியமைத்தார். இவரி காலத்தில் பொதுமக்களின் பண உதவியுடன் பாடசாலைக்கென காணித்துண்டொன்றும் கொள்வளவு செய்யப்பட்டது.

1992-ஆம் ஆண்டு பாடசாலையின் வரலாற்றில் மற்றோரு மைல்கல் எனக்குறிப்பிடலாம். இவ் ஆண்டிலேயே க.பொ.த. உயர்தரக் கலைப்பிரிவு இவ்வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பாடசாலையின் தரம் 10 ஆகமாற்றமடைந்தது. இதன் மூலம் இக்கிராம மாணவர்கள் தமது குழலிலேயேம உயர்தரக்வியைப் பெறும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இக் காலப்பகுதியில் இப்பாடசாலையின்அதியராக திரு.இ.கந்தசாமி அவர்கள் கடமையாற்றினார். உயர்தர வகுப்புஆரம்பிக்கப்பட்டதன் சிறந்த அறுவடையாக 1995ஆம் ஆண்டில் மாவட்டநிலையில்முதலாம் இடத்தினை இப்பாடசாலை மாலாவன் சீ.முரளிதரன் பெற்றுக் கொளடமைகுறிப்பிடத்தக்க சாதனை ஆகும். திரு. இ.கந்தசாமி அதியம் அவர்கரியர் காலத்தில்பெற்றோரின் பங்களிப்புடன் பாடசாலை யென ஒரு துண்டுக்காணி கொள்வனவு 

செய்யப்பட்டதுடன் மற்றுமொரு துண்டுக் காணி இக் கிராமத்தைச் சேர்ந்த மர்மு தென் எருவில் பற்று பிரதேச சபையின் தற்போதைய உறுப்பினர் திரு.ப.கணேச அவர்களால் கொள்வளவு செய்யப்பட்டு பாடாாலைக்கு நன்கொடையா வழங்கப்பட்டது. திரு கந்தசாமி அதிபரின் காலப்பகுதியிலேயே தற்போழ இப்பாடசாலையில் இருக்கின்ற மாடிக் கட்டடங்கள் இரண்டும் நிர்மாணிக்கப்பட்ட விஷேட அம்சமாகும். எனவே இவரது காலப் பகுதி பாடசாலையின் வரலாற்றில் பொற்காலமாக கிராம மக்களால் குறிப்படப்படுகின்றது.

பாடசாலையின் வரலாற்றில் மற்றுமொரு முக்கிய கட்டம் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்றது. கிறிஸ்தவ பாடசாலைக்கு சவாலாக சைவப் பாடசாலையாக 1942ஆம் ஆவர்டில் நிறுவப்பட்ட அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 2001.01.01 முதல் இவ் வித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டு இவ் வித்தியாலயமானது இக் கிராமத்தில் தனித்துவமான கல்வி நிறுவனமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இக்காலகட்டத்தில் பாடசாலையின் அதிபராக திரு.கோ.கயிலாயபிள்ளை அவர்கள் கடமையாற்றினார். இவரது காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவில் மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இவரைத் தொடர்ந்து பதவியேற்ற திரு.சோ.தர்மசீலன் அவர்கள் காலத்தில் மாடிக்கட்டட வேலை பூர்த்தி செய்யப்பட்டது.

இவ்வாறு நீண்ட கால கல்வி வரலாற்றினைக் கொண்ட இப்பாடசாலையின் நூற்றாண்டு விழா 19.12.2010 ஆம் திகதியாகிய இன்று நடைபெறுவதையிட்டு தற்போதைய அதிபர் என்ற வகையில் மனநிறைவடைகின்றேன்.